Tuesday, November 17, 2009

டீலா நோ டீலா

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை கொடுத்துவைத்தவனாக இருக்கிறேன்.இரவு 7 மணிக்கு சன் செய்திகள்.7.30க்கு ஜெயா செய்திகள்.அவ்வளவுதான் விரும்பிப்பார்ப்பது. மற்ற நேரம் அனேகமாக பார்ப்பதேஇல்லை. ஜெயா செய்திகளை இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை ஒருத்தி ஐயோ செய்திகள் என்று வாசித்தாள்.ஆட்சியிழந்து அடுத்து ஆட்சிக்கு வரப்போவதற்கான முன் ஏற்பாடுகளையும் இழந்துவரும் ஜெயலலிதாவைப் பார்த்தால் அந்த செய்திகளை அப்படித்தான் வாசிக்கத்தோன்றுகிறது.

ஜெயா செய்திகளில் பிடித்த அம்சம் செய்திக்கு முன்னே வருகிற ’இன்று’.செய்திகளின்போது பிடிக்காத அம்சம் இடப்பக்கத்தில் ஜெயலலிதாவின் பச்சைப்புடவை (அது கோட்டோ) போட்டோவைக் காட்டி பத்து நிமிடங்கள் அவர் கருணாநிதியை வசைந்ததை திடக்குரலில் சொல்வது. அந்தக் குரலுக்கு உரிமையாளர் சரோஜ்-தானா என்று யாராவாது தெரிவியுங்கள்.

வீட்டில் டி.வி.கேபிள் கனெக்சன் என்று பார்த்தால் நானும் டண்டனா டண் தான்.கனெக்சனைப் பற்றி பிறகு எழுதலாம். நான் இன்னும் மீசையை எடுக்கவில்லை.டண்டனாவைப் பரிந்துரைக்கிறவர்மாதிரி தொப்பையும் வரவில்லை.

இதில் வருகிற சேனல்களுக்கே உருப்படியான பல நிகழ்ச்சிகள் பார்க்கலாம். வீட்டில் இதர வாழிகளின் ஆதரவு ஆதித்யா(அசைச்சுக்க முடியாது அசைச்சுக்க முடியாது...ஆயுசு நூறு),சுட்டி டி.வி (நிராகரிக்க முடியாத உறுப்பினரின் விருப்பம் இது), அப்புறம் சன் னில் எருமைச்சாணியை எந்நேரமும் அப்பினாற்போலவே வரும் எட்டுப்பத்து பாத்திரங்கள் வரும் திருமதி.செல்வம் போன்ற தொடர்களுக்கு எனது கோபித்தலும் வீட்டாரின் ஏகோபித்தலும் இருக்கிறது.

புதுத்தொடரோ புதிய நிகழ்ச்சிகளோ ஆரம்பிக்கும் போது அதை விரும்பி-முதலாவது நிகழ்வை- பார்ப்பது வழக்கம். பய கண்டெம்ப்ரரியா இருக்கணுமல்ல அதுக்காக.அப்படித்தான் டீலா நோ டீலா பார்த்தேன். விதிமுறைககள் மனசிலாகவில்லை.அதற்கு இரண்டு மூன்று வாரங்கள் பார்க்கவேண்டும். பங்கெடுக்கிறவர் ஆணாயினும் பெண்ணாயினும் பார்க்க நேர்த்தியாக இருக்கவேண்டும் என்பது மங்கலாகப் புரிகிறது.

அப்புறம் கிங் ஃபிஷர் விண்- உபசாரிணிகளை நினைவுபடுத்தும் உடைத்தோற்றத்தில் பல பெண்கள் கேலரி கட்டி நின்று பெட்டியைத் திறந்து திறந்து காட்டுகிறார்கள். அவற்றில் எழுதப்பட்ட எண்கள் உள்ளன. அதற்கும் போட்டிக்கும் எதோ சம்பந்தம் இருக்கும் போல. இது ஆண் பார்வையாளர்களைக் கவர்கிற அம்சமாயிருக்கலாம். அதே நிகழ்ச்சியில் பெண்களைக் கவர்கிற அம்சமும் ஏதாவது இருக்கலாம். நாலு நிமிடத்துக்கு ஒரு முறை தொகை தொகை என்று பணத்தைப்பற்றிப் பேசினாலே பாவையருக்கு-தோகையருக்கு பிடித்துப்போய்விடும். நிகழ்ச்சி வெற்றிகரமாகப் போகும் என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை. அஞ்சாயிரம் பந்தயம். டீலா நோடீலா.

நிகழ்ச்சி வடிவமைப்பாளர் கண்ணில்பட்டால் ஒரே கேள்விதான் கேட்கவேண்டும்.
உங்கொய்யால ஆம்பளைக தொறந்தா பொட்டி தொறக்காதாடா?

6 comments:

Rajan said...

//உங்கொய்யால ஆம்பளைக தொறந்தா பொட்டி தொறக்காதாடா? //

அதானே !....
நல்லா கேளுங்க தலைவா!

அந்த பொண்ணுங்க தொறந்தா உள்ள என்ன இருக்குமோன்னு பார்வையாளனுக்கு திக் திக்னு அடிச்சுக்குது !

நேசமித்ரன் said...

இப்பதான் அண்ணா உஙக எழுத்து அதோட முழு நையாண்டி கலந்த சமூக கோபத்தோட வெளிப்படுது ப்ளாகலயும்
:)

நேசமித்ரன் said...

இதை இதைத்தான் உஙக கிட்ட இருந்து எதிர்பார்க்குறது

நேசமித்ரன் said...

டீல் அண்ணா டீல்!!!

சங்கர் said...

//ஜெயா செய்திகளில் பிடித்த அம்சம் செய்திக்கு முன்னே வருகிற ’இன்று’.செய்திகளின்போது பிடிக்காத அம்சம் இடப்பக்கத்தில் ஜெயலலிதாவின் பச்சைப்புடவை (அது கோட்டோ) போட்டோவைக் காட்டி பத்து நிமிடங்கள் அவர் கருணாநிதியை வசைந்ததை திடக்குரலில் சொல்வது//

கோடம்பாக்கத்து துணை நடிகைகளில் ஒருவர் தினமும் தோன்றி, அவர் வீட்டு மரத்தில் மாங்காய் களவு போனது, பக்கத்து வீட்டு நாய் குட்டி போடாதது இன்னும் பல கொடுமைகளுக்கெல்லாம் கருணாநிதி அரசுதான் காரணமென பேட்டியளிப்பதை விட்டுவிட்டீர்களே

adhiran said...

tv vilambarankalai paththi oru katturai ezhuthanum. uthavu nanbaa. un nanbarkalkitta ethu pidicha vilambaram, en?, ethu pikkaatha vilambaram, en?, naan sila perkitta vechurukken.(enakku pidichchathu surf exel, pidikkaathathu axe effect)