Thursday, April 28, 2011

கருதாப் பிழை...

நேற்று யூ - டியூப் பில் கரூரில் சீமான் ஆற்றிய உரை கேட்டேன். காங்கிரசை எதிர்த்து பொரிந்து தள்ளியிருந்தார். கட்டிக் காது அறுத்தல் என்பது அதுதான். நான் எழுத வந்தது அது பற்றி அல்ல.

கூட்டத் துவக்கத்தில் வந்த தமிழர் ஒருவர் இப்படித் தொடங்கினார்.
‘’பொங்கு தமிழர்க்கு இனனல் விளைந்தால் சிங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு ‘’

சம்ஹாரத்தின் அடியாகப் பிறந்த சங்காரம் என்ற வார்த்தையை அன்பர் அறிந்திருப்பது போலத் தெரியவில்லை. ஒரு வேளை படிக்க நேர்ந்திருந்தாலும் ‘’ சிங்காரத்தை இப்படி தப்பா அடிச்சிருக்காங்க பாரு’’ என்ற எண்ணத்தில் ‘திருத்தி’ வாசித்திருப்பார் என நினைக்கிறேன்.

சீமான் பேசியதைப் பார்த்தபோதும் சில விஷயங்களை யோசிக்கும் வேளையிலும் அன்பர் சொன்னதிலும் அர்த்தமுள்ளது போல ஒரு தோற்றம் மேவியது,

1 comment:

Raju said...

ஒருவேளை அந்தகாலத்து பாக்யரஜ் படங்களெல்லாம் பார்த்து, 'கல்லாப்பெட்டி' சிங்காரத்தின் இரசிகராயிருப்பார் போல...